ராம் நகர் மாவட்டம் மாகடி தாலுகா கஞ்சிகல் கிராமம் பண்டே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த பசலிங்க சுவாமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹனி டிராப் முறையில் மிரட்டி பசவலிங்கம் சுவாமி தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபல்லாப்புராவை சேர்ந்த என்ஜினியரிங் கல்லூரி மாணவி நீலாம்பிகா, கண்ணூர் மடத்தின் மடாபதியாக மிருதனஞ்ஜெய சுவாமி, வக்கிலான மகாதேவய்யா ஆகியோரை நேற்று முன்தினம் மாகடி போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று 3 பேரையும் மாகடி 1வது ஜே.எம்.சி. கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலிசார், அவர்களை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 3 பேரையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தனர். அதன்பிறகு 3 பேரை போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் நீலாம்பிகா வலையில் மடாதிவதி பசவலிங்க சுவாமி சிக்கியது எப்படி குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தூமகூருவில் உள்ள சித்தாகங்கா மடத்திற்கு நீலாம்பிகா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த மடத்திற்கு வந்த பசவலிங்க சுவாமிகள் பழக்கம் ஏற்பட்டு, செல்போன் எண்ணை நீலாம்பிகா வாங்கி உள்ளார். அதன் பிறகு தனக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது, பண பிரச்சினை அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரிடம் இருந்து ரூ.500, ரூ.1000 நீலாம்பிகா வாங்கியுள்ளார். இதனை அக்யடுத்து பசவலிங்க சுவாமியை மயக்கக்கூடிய வகையில் வசீகரமாக பேசியுள்ளார். அதன் பிறகு வீடியோ காலில் பேசும்போது பசவலிங்க சுவாமி ஆபாசமாக வீடியோ எடுத்தது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் உள்ள மகாதேவய்யா பசுவலிங்க சுவாமியிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது உங்களது ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளார். மேலும் அவர் வேறு சில மடாதிபதிகளையும் மிரட்டி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது..