Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மடிக்கணினிக்கு பதில் மரக்கட்டை…. கணவன் மனைவியின் பலே ஐடியா…. வெளியான பகீர் சம்பவம்….!!!!

நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட கணவன் – மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி அடுத்த வேலம்பாளையம் பகுதியில் கார்த்திக் – ராதிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கார்த்திக் ஒரு தனியார் நிறுவனத்தில் 44,900 ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் மற்றும் 44,900 மதிப்புள்ள மடிக்கணினி உள்ளிட்ட 3 பொருள்களை ஆர்டர் செய்திருந்தார். அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நவீன் என்பவர்  பார்சல் டெலிவரி செய்வதற்காக கார்த்திக் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ராதிகா டெலிவரி செய்ய வந்த நவீனிடமிருந்து பார்சலை வாங்கி தனது கணவரிடம் கொடுத்துள்ளார். அதன்பிறகு ராதிகா நவினிடம் சுமார் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து கார்த்திக் 3 பொருள்களில் 1 பொருளை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கான பணத்தை நவீனிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து மடிக்கணினி மற்றும் ஆப்பிள் வாட்ச் பார்சலை நவீனிடம் கார்த்திக் கொடுத்துள்ளார். இந்தப் பார்சலை நவின் அலுவலகத்தில் சென்று கொடுத்துள்ளார். அப்போது பார்சலின் வெயிட் அதிகமாக இருந்ததால் உயரதிகாரி சந்தேகப்பட்டு பார்சலை பிரித்து பார்த்துள்ளார். அந்த பார்சலில் மரக்கட்டை மற்றும் விலை குறைந்த வாட்ச் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த உயரதிகாரி கார்த்திக்கின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு கார்த்திக்கின் மனைவி ராதிகா முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த உயரதிகாரி மலையம்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையின் போது கார்த்திக் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும், ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதும்  தெரியவந்தது. இதனையடுத்து கார்த்திக் மற்றும் ராதிகா ஆகிய இருவரும் இணைந்து சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் ஒரு திருட்டு வழக்கில்  சென்னை காவல்துறையினர் ராதிகாவை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் கார்த்திகை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |