Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மடைக்கல்லில்…”கி.பி 9-10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகள்”… கண்டுபிடித்த வரலாற்று பேராசிரியர்கள்…!!!

திருமாணிக்கம் பெரிய கண்மாய் மடைக்கல்லில் வட்டெழுத்துக் கல்வெட்டு பொறிக்கப்பட்டு இருப்பதாக வரலாற்று பேராசிரியர்கள் கண்டுபிடித்தனர்.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் உள்ள திருமாணிக்கம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் டி.மீனாட்சிபுரம். இந்த கிராமத்தின் அருகில் பெரிய கண்மாய் மடைக்கல்லில் எழுத்துக்கள் இருப்பதாகவும், அது எந்த காலகட்டத்தை சேர்ந்தது என்று தெரியாமல் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த டி.மீனாட்சிபுரம் பகுதிக்கு வந்த மதுரை மன்னர் திருமலைநாயக்கர் கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியரான பிறையா, ராஜகோபாலன் ஆகியோர் திருமாணிக்கம் கண்மாய் பகுதிக்கு சென்று மடைக்கல்லில் ஆய்வு செய்தனர். அதில் மடைக்கல்லில் கி.பி 9-10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த 12 வரிகள் கொண்ட வட்டெழுத்துக் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

மேலும் அந்தக் கல்வெட்டில் கூடர்க்குடியில் வசித்த சங்கத்தட்டான் என்ற தங்க ஆபரணங்கள் செய்யும் வியாபாரி இந்த வேம்பங்குடி மடையை கட்டியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் அதை பாதுகாக்கும் வகையில் அதற்கு வரி கொடுத்தும் வந்துள்ளார். மேலும் இந்த மடை மூலம் ஆண்டிற்கு மூன்று போகம் சாகுபடி செய்துகொள்வதற்கு குடி மக்களுக்கு நன்மை செய்ததாகவும் இதில் பொறிக்கப்பட்டு இருக்கிறது என்று வரலாற்று பேராசிரியர்கள் தெரிவித்தார்கள். மேலும் இந்த பகுதி கி.பி 9 -10-ஆம் நூற்றாண்டில் செழுமையாக இருந்தது. ஆனால் தற்சமயம் கண்மாய் வறண்டு காணப்படுகிறது. வரத்து கால்வாய்களை சரி செய்து கண்மாயில் நீரை கொண்டுவந்தால் இப்பகுதி மக்கள் வரலாற்றுப் பெருமைமிக்க பயன்களை அடைவார்கள் என்று கூறினார்கள்.

Categories

Tech |