Categories
மாநில செய்திகள்

மட்டத்தை உயர்த்தாதீங்க…. வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க…. தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு…!!!

கடந்த வருடம் சென்னையில் கனமழை பெய்தபோது சென்னை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் சாலைகள் உயர்த்தி போடப்பட்டதன் காரணமாக மக்களுடைய வீடுகளுக்கும் வெள்ள நீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கும் துயரத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்ட இறையன்பு ஐஏஎஸ் தமிழகத்தில் சாலை போடும்போது மேல்தள கட்டுமானத்தை முழுவதுமாக சுரண்டி எடுத்து விட்டு அதே அளவிற்கு மேல் தளம் போட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளில் மட்டத்தை அதிகரிக்கவே கூடாது. மேற்பரப்பை சுரண்டி விட்டு சாலை போடுவதால் வீடுகளுக்குள் நீர் புகுந்து விடாமல் தடுக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் கனமழை பெய்தாலும் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் தடுக்க முடியும். மக்களும் நிம்மதியாக இருப்பார்கள் என்று கூறப்படுகின்றது.

Categories

Tech |