மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
மட்டன் – 1 கிலோ
வெங்காயம் – 50 கிராம்
கொத்தமல்லி தூள் – ஒரு கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – சிறிதளவு
நல்லெண்ணெய் – 100 கிராம்
சீரகத்தை – ஒரு கரண்டி
மிளகாய் – 10
இஞ்சி – 25 கிராம்
செய்முறை:
1 கிலோ மட்டனை நன்கு சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் வெங்காயம், இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், மிளகாய், அரைத்து வைத்திருக்கும் மசாலா, 1 கிலோ மட்டன், சிறிது உப்பு, மஞ்சள்தூள் போட்டு வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நன்றாக வேக விடவும். குக்கர் விசில் வந்ததும் இறக்கவும். இப்போது மட்டன் குழம்பு தயார். அதனை சாதம் அல்லது இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.