Categories
சென்னை மாநில செய்திகள்

மட்டன் பிரியாணியில் கிடந்த புழு…. “எடுத்துப் போட்டுட்டு சாப்பிடுப்பா”….. சென்னையில் பிரபல உணவகத்தில் பரபரப்பு…..!!!!

சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் உள்ள சேலம் ஆர்ஆர் பிரியாணி உணவகத்தில் விக்னேஷ்,சுதிந்தர் பாலாஜி மற்றும் கோபா ஆகிய மூன்று பேரும் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். மூன்று பேரும் ஆர்டர் செய்த பிரியாணியை சாப்பிட தொடங்கிய போது அதில் ஒரு மட்டன் பிரியாணியில் புழு ஒன்று இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்பு இது குறித்து கடை ஊழியரிடம் புகார் அளித்த, கத்தரிக்காயிலிருந்து வந்து இருக்கும் புழுவை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுங்கள் என்று அலட்சியமாக கூறியுள்ளார். இது குறித்து அந்த கடைக்கு சாப்பிட வந்த மற்றவர்களுக்கும் பிரியாணியில் புழு இருந்த விஷயம் தெரிய வந்ததால் அவர்களும் அங்கிருந்து சாப்பிடாமல் எழுந்து சென்றனர். இதனைத் தொடர்ந்து இளைஞர்கள் புகார் தெரிவித்த நிலையில் உணவு பாதுகாப்பு துறையினர் அந்த உணவகத்தில் உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |