Categories
சினிமா தமிழ் சினிமா

மணக்கோலத்தில் க்யூட்டாக இருக்கும் நடிகை ஹன்சிகா…. களைக்கட்டிய திருமணம்…. வெளியான வைரல் வீடியோ….!!!

தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் ஹன்சிகா, தொழிலதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அண்மையில் அறிவித்தார். இதையடுத்து பிரான்சில் ஈபிள்டவர் முன்பு நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்திருந்தார். இவர்களுடைய திருமணமானது 450 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இன்று (டிச..4) நடக்கிறது.

இதனை முன்னிட்டு 3 தினங்களாக அந்த அரண்மனையில் திருமணம் நிகழ்ச்சிகளானது களைகட்டியது. இதனிடையில் மெஹந்தி பங்ஷன் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இவர்களுடைய திருமண கொண்டாட்டம் சுபி இசை கச்சேரியுடன் ஆரம்பித்தது. தற்போது ஹன்சிகா மணக்கோலத்தில் இருக்கும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |