Categories
மாநில செய்திகள்

மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்ற காதலன்…. திகைத்து போன மாப்பிள்ளை…. பின் நடந்த சம்பவம்….!!!!!

வட சென்னை ஐ.ஓ.சி நெடுஞ்செழியன் நகர் பகுதியில் வசித்து வரும் ரேவதி என்பவருக்கும் தண்டையார் பேட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் மணமகளின் காதலன் என கூறப்படும் சதீஷ் மாப்பிள்ளையின் தாலியை தட்டிவிட்டு தான் கொண்டு வந்த தாலியை கட்ட முற்பட்டுள்ளார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த உறவினர்கள் தாலிகட்ட முற்பட்ட சதீஷை தடுத்து காவல்துறைக்கு தாவல் கொடுத்தனர்.

அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சதீஷை மீட்டு ஆர்.கே. நகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், சதீஷும் மணப்பெண்ணும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் மணப் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அடுத்து தன் காதலன் சதீஷை திருமணத்திற்கு அவர் வரவழைத்துள்ளார். அதன்படி அங்குவந்த சதீஷ், மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முற்பட்டார்.

இந்த நிலையில் மணப்பெண்ணின் சகோதரர் அதனை தடுத்து நிறுத்தி இருக்கிறார். அதனை தொடர்ந்து மணப்பெண்ணின் சகோதரரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் மணப்பெண்ணிடமும் பெண் காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது மணப்பெண் சதீஷை காதலிப்பதாக கூறினார். அத்துடன் காதலர் சதீஷை அவர் தான் அங்கு வர சொன்னதாகவும் கூறியிருக்கிறார். அதன்பின் இருதரப்பினரிடமும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக மணமகள்வீட்டார் ஏற்பாடு செய்திருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இச்சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

Categories

Tech |