மணப்பெண் தேடி வெளியிடப்பட்ட வித்தியாசமான விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருமணம் என்பது முந்தைய காலம் போல் தற்போது இல்லை. முன்பெல்லாம் 20 வயதுக்கு முன்பாகவே, ஆண்கள் திருமணம் செய்து கொள்வார்கள். அதே போல் பெண்களும், 18 வயது நிரம்பிய உடனே திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், தற்போதெல்லாம் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீண்ட வருடங்கள் திருமணத்தை தள்ளிப் போட்டு பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இப்படி வாழ்க்கையில் நல்ல நிலை அடைந்தவர்கள், தங்களுக்கு வரப்போகும் ஆணோ, பெண்ணோ இப்படித்தான் இருக்கவேண்டும் என மனதிற்குள் நிர்ணயம் செய்து கொள்கிறார்கள். அதற்கேற்றார்போல், பல மேட்ரிமோனிகளும் உள்ளன. அங்கே சென்று தங்களுக்கு ஏற்றார்போல, ஆணையோ, பெண்ணையோ தேர்வு செய்து கொள்கிறார்கள். அந்த வகையில், சற்று வித்தியாசமான முறையில் ஆண் ஒருவர், தனக்கு தேவையான மணப்பெண்ணை தேடும் விளம்பரம் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. அதில்,
தன்னுடைய பெயர் சாட்டர்ஜி, வயது 37 ஆகிறது. 5.7 அடி உயரத்துடன் அழகான தோற்றம் உடையவன் நான். நல்ல அமைதியான தாய்தந்தையர் உள்ளனர். காம்க்கூர் என்னும் ஊரில் சொந்த வீடும், காரும் உள்ளது. தற்போது நான் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். எனக்கு மனைவியாகப் போகும் பெண் செல்வந்தராகவோ, அழகாகவோ, ஒல்லியாகவோ, இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எந்த தகுதியும் தேவையில்லை. பெண் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. வரதட்சனையும் வேண்டாம்.
ஆனால், கண்டிப்பாக சமூக வலைதளங்கள் உபயோகிக்காத பெண்ணாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட IAS அதிகாரி ஒருவர் மணப்பெண் மற்றும் மாப்பிள்ளை பார்க்கும் விதிகள் மாறுகிறது என்று RETWEET செய்ய இந்த விளம்பரம் தற்போது வைரல் ஆகியுள்ளது.