லக்னோ மலிஹாபாத்தில் திருமணத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் வயது 21 என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றதாகவும், மணமகனுக்கு மாலை போடுவதற்காக மேடையில் ஏறிய மணப்பெண் அங்கேயே விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.