இன்றைய காலகட்டத்தில் மணமகன் மற்றும் மணமகள் தேடும் படலம் பல்வேறு விதி முறைகளைக் கடந்து மேட்ரிமோனி, இணையதளம், செய்தித்தாள்கள் என விரிவடைந்துள்ளது. இந்த தேடலின் போது சிலர் வித்தியாசமான முறையில் மணமகன், மணமகள் தேவை என விளம்பரம் செய்கின்றனர். அந்த வகையில் மணமகன் தேவை என ஒரு பெண் வீட்டார் விளம்பரம் செய்துள்ளனர். அந்த விளம்பரத்தில் மணமகள் 24 வயது நிரம்பிய எம்பிஏ பட்டதாரி என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு செல்வாக்கு நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், ஐஏஎஸ், ஐபிஎஸ், டாக்டர் மற்றும் தொழிலதிபர்கள் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சாப்ட்வேர் இன்ஜினியர்கள் யாரும் தயவு செய்து போன் செய்யாதீர்கள் என வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்துள்ளார்கள். அந்த விளம்பரத்தில் மணமகள் வீட்டை தொடர்பு கொள்வதற்கான ஈமெயில் ஐடியையும் விளம்பரத்தில் இணைத்துள்ளார்கள். மேலும் சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் யாரும் தயவு செய்து போன் பண்ண வேண்டாம் என்ற அந்த விளம்பரம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Future of IT does not look so sound. pic.twitter.com/YwCsiMbGq2
— Samir Arora (@Iamsamirarora) September 16, 2022