இட்லி பொடி மிக சுவையாக செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்:
தேவையான பொருட்கள்:
வத்தல் – 50 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
கடலைப் பருப்பு – 100 கிராம்
உளுந்தம் பருப்பு – 150 கிராம்
மிளகு – ஒரு ஸ்பூன்
எள் – 50 கிராம்
பூண்டு – 10 பல்
பெருங்காயத் தூள் – ஒன்றரை ஸ்பூன்
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வத்தல், கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் கடலைப் பருப்பு 100 கிராம், சேர்த்து லேசாக வறுத்த பின் அதுகூடவே 150 கிராம் உளுந்தம்பருப்பு சேர்த்து லேசாக வறுக்கவும், பிறகு அதோடு ஒரு ஸ்பூன் மிளகு, எள்ளு 50 கிராம், தோல் உரிக்காத பூண்டு பத்து பல் இதையும் அதோடு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.
பெருங்காயத்தூள் சேர்த்து சேர்த்து லேசாக வாட்டி இவை அனைத்தையும் நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். ஆறிய பிறகு நாம் வறுத்து வைத்திருக்கும் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு மிகவும் பொடியாகவும் இல்லாமல், பரபரவென்று இல்லாமலும் நார்மலாக தேவையான அளவு உப்பு சேர்த்து பொடியாக திரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சுவையான இட்லி பொடி ரெடி..!