Categories
தேசிய செய்திகள்

மணமேடையில் குட்கா மென்ற மணமகனுக்கு… மணமகள் கொடுத்த பளார்… வைரலாகும் வீடியோ…!!!

மணமேடையில் அமர்ந்து குட்கா சாப்பிட்ட மணமகனுக்கு மணமகள் பளாரென்று ஓங்கி அடித்த சம்பவம் வைரலாகி வருகின்றது.

டெல்லியில் திருமண விழாவின்போது மணமேடையில் மணமகன் குட்கா பாக்கை வாயில் வைத்து மென்று கொண்டிருந்ததால், மணப்பெண் அவரை ஓங்கி அடிக்கும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் மணமேடையில் திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது மணமகன்-மணமகள் அருகில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் குட்காவை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் இதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகள் அவரை ஓங்கி பளாரென அறைந்தார்.

அப்போது அடி வாங்கிய நபர் மணமகனும் குட்கா புகையிலையை வாயில் வைத்துள்ளதாக மாட்டி விட்டார். இதனால் மணமகன் மீது கோபம் அடைந்த மணமகள் அவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதன்பின்பு அவர் குட்கா புகையிலையை வெளியில் துப்பும் படி கூறினார்.  மணமேடையிலிருந்து எழுந்த மணமகன் பாக்கை வெளியில் துப்பிவிட்டு மீண்டும் மண மேடையில் அமர்ந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/reel/CTBIEQEpMhf/?utm_source=ig_web_copy_link

Categories

Tech |