மணல் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புழுதிபட்டி பகுதியில் அமைந்துள்ள மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒடிசா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஜாமீர் என்பவர் கருப்பு நிற தாது மணல் ஏற்றி கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென லாரி நிலை தடுமாறி சாலையோரம் அமைந்துள்ள பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த ஜாமிர் மற்றும் கிளீனர் ஆகிய 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்