புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுத் தனமாக ஆற்றிலிருந்து மணல் கடத்தி வந்த வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுர், வங்காரம்பட்டி முள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் கோரையாற்றிலிருந்து மணல் கடத்தி வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஆட்டோ டிரைவரிடம் விசாரணை செய்த போது அவர் ஆவாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயசுந்தர் என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆட்டோவுடன் மணலை பறிமுதல் செய்ததுடன் மணல் கடத்தியதற்காக காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.