புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மணல் கடத்தி வந்த லாரி டிரைவர் காவல் துறையினரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை காவல் துறையினர் நிறுத்தியுள்ளனர். ஆனால் அந்த லாரி டிரைவர் லாரியில் மணல் கடத்தி சென்றதால் லாரியை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவல் துறையினர் லாரியை பின் தொடந்து சென்றுள்ளனர்.
இவ்வாறு காவல் துறையினர் லாரியை பின் தொடர்வதை பார்த்த லாரி டிரைவர் அச்சத்தில் லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து காவல் துறையினர் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய லாரி டிரைவரை வலை வீசி வருகின்றனர்.