புதுக்கோட்டை மாவட்டத்தில் ரோந்து பனியின் போது மாட்டுவண்டியில் மணல் அள்ளிக் கொண்டு வந்தவர்கள் காவல்துறையினரை பார்த்ததும் தப்பிச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவுடையார்கோவில் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்கள் காவல்துறையினரை கண்டதும் மாட்டு வண்டியை சாலையோரம் நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்த காவல்துறையினர் அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து நாட்டாணியிலுள்ள வெள்ளாற்றிலிருந்து மணல் அள்ளிக் கொண்டு மாட்டு வண்டியில் வந்தவர்கள் அந்த வழியாக வந்த தாசில்தாரின் வண்டியை பார்த்ததும் மாட்டு வண்டியை ரோட்டில் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிச் சென்றுள்ளனர். இதனால் அந்த மாட்டு வண்டியை தாசில்தாருடன் இருந்த அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆவுடையார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பிச் சென்றவர்களை வலை வீசி தேடி வருகின்றார்கள்.