Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மணல் கடத்துனது மட்டுமில்லாம கொலை மிரட்டல் வேற… சிவகங்கையில் பரபரப்பு புகார்… போலீஸ் வழக்கு பதிவு..!!

இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே கிராம உதவியாளர் அஞ்சலிதேவி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்று தெய்வேந்திரன் என்பவரது வீட்டின் முன்பு மணலை கொட்டியுள்ளது. அதனைக் கண்ட கிராம உதவியாளர் டிப்பர் லாரியை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் மணல் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் அவரிடம் பிடிபடாமல் லாரியுடன் தப்பி ஓடியுள்ளனர்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி கருப்பையா மகன் தெய்வேந்திரன், பிரான்சிஸ் மகன் தாமஸ், கருப்பையா மகன் ஹரிதாஸ், இருதய மகன் அமல்ராஜ் ஆகிய 4 பேர் மீதும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதாகவும் இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |