Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை ..!!

செய்யாற்றுப்படுகையில் ஜீவசமாதிகளை கூட விட்டு வைக்காமல் மணல் கொள்ளையர்கள் மணல்  கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா கரியமங்கலம் எனும்  கிராமம் செய்யாற்று பகுதியில் மணல் கொள்ளை தொடர்ந்து நடந்து வருகின்றது . அப்பகுதியில்  உள்ள ஆற்றின் கரையில் 9 ஜீவசமாதிகள் இருக்கிறது. இதை கிராம மக்கள் தொடர்ந்து   வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் செய்யாற்றங்கரையில் தினமும் பகல் நேரத்தில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் மணல் கொள்ளை செய்து பதுக்கி வைத்து விட்டு இரவு சமயங்களில்,டிராக்டர்கள் மூலம் மர்மநபர்கள் கடத்திச்செல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆற்று மணல் கொள்ளையடிப்பவர்கள்  மீது நடவடிக்கை எடுத்து, மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட  வாகனங்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Categories

Tech |