மணல் சிற்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மணல் சிற்பக்கலைஞர் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஒடிஷா மாநிலம் பூரி பகுதியை சேர்த்த பட்நாயக், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி புவனேஷ்வரில் மணற்சிற்பங்களை வடித்துள்ளார்.
அதில் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்போவோரிடம் இருந்து விலகியிருக்க வலியுறுத்தியும், வைரஸிற்கு எதிரான யுத்தம் குறித்து பீதியடைய வேண்டாம் என்பதை எடுத்துரைக்கும் வகையிலும் பட்நாயக் சிற்பங்கள் வரைந்துள்ளார். மேலும் உடலால் தனித்திருப்போம் உள்ளதால் இணைந்திருப்போம் என்ற வாசகங்கள் அவரது மணல் சிற்பத்தில் இரும்பெற்றிருந்தது.
இதனை பாராட்டும் வகையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகிற்கு வலுவான செய்திகளை சொல்ல கலை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள பட்நாயக், உலக சுகாதார அமைப்பின் தலைவரிடம் இருந்து எனக்கு பாராட்டு கிடைத்திருப்பது மிகப்பெரிய கவுரவம் என்று தெரிவித்துள்ளார்.