மணல்மேல்குடியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருக்கும் போது வசமாக மாட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியில் அத்தாணி காட்டாறு உள்ளது. அப்பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் முன்னிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் திருட்டுத்தனமாக 3 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை போலீசார் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் ராம நாதன், செல்லதுரை, செல்வராஜ் என்றும், அத்தாணி பகுதியில் வசிப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அம்மாட்டு வண்டிகளை கைப்பற்றியதோடு அவர்களை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.