Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுக்கு ஒரு முடிவே கிடையாதா..? அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்…. வலை வீசி தேடும் காவல் துறையினர்…!!

செட்டிதிருக்கோணம் ஓடையில் திருட்டுத் தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தவரை காவல் துறையினர் பிடிக்க சென்ற போது தப்பி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செட்டித்திருக்கோணம் ஓடையில் மணல் அள்ளி கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

இந்நிலையில்  காவல்துறையினரை பார்த்தவுடன் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் டிராக்டரை அந்த இடத்திலே  விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையின் பெயரில் காவல் துறையினர்  தப்பி சென்றவரை தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |