லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வைத்தியலிங்கபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் மில்லில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இதனை அடுத்து முன்னால் சென்ற லாரி மணல் மேட்டில் ஏற முயன்றது. அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்து சுப்ரமணியன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணியன் லாரி சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.