விக்கிரவாண்டியில் மணல் லாரியை ஏற்றி போலீசாரை கொல்ல முயற்சி செய்த 4 பேரையும் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினமும் போலீசார்களும் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணியளவில் பனையபுரத்திலுள்ள திருக்கனூர் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் லாரியை நிறுத்துமாறு கை காட்டிய போது அவரின் மீது ஏற்றுவது போல் வேகமாக வந்துள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் உஷாராக அங்கிருந்து விலகியதால் அவர் தப்பித்துக் கொண்டார். இதையடுத்து போலீஸார்கள் அந்த லாரியை துரத்திக்கொண்டு மடக்கிப் பிடித்ததனர். அந்த லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. அந்த லாரியில் இருந்தவர்கள் சாலமேட்டை சேர்ந்த ராஜா, ராதாபுரத்தைச் சேர்ந்த ஐயப்பன், பல்ராஜன் குப்பம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ், சாலமன் சுபாஷ் உள்ளிட்டோர் என தெரியவந்தது. இவர்கள் நால்வரும் சப்-இன்ஸ்பெக்டர் தேவரத்தினத்திற்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கினறனர். இதனால் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்ததோடு லாரியையும் பறிமுதல் செய்தார்.