Categories
தேசிய செய்திகள்

மணவறையில் மணப்பெண் மூளைச்சாவு…. பெற்றோர்கள் செய்த செயல்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

திருமணத்தின் போது மணப்பெண் திடீரென மூளைச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் ஸ்ரீனிவாஸ்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சைத்ரா. இவரது திருமணத்தில் மணமகனுடன் சேர்ந்து விருந்தினர்களை மன மகிழ்ச்சியுடன் வரவேற்று புகைப்படத்திற்கு சிரித்தபடி போஸ் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கமடைந்து மணவறையில் விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றுள்ளனர். மேலும் அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக கூறினார்.

இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது. இந்த நேரத்திலும் தங்களது மகளின் மரணம் ஒரு முடிவாக இருக்கக் கூடாது என்று எண்ணிய அவரது பெற்றோர் நினைத்தனர். இதனால் தங்களது பெண்ணின் முக்கிய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். மேலும் மகளை இழந்த நேரத்திலும் அந்த பெற்றோரின் இந்த முடிவு அனைவரின் ஆதரவையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.

Categories

Tech |