மணவாளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கியதில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணவாளக்குறிச்சி கரியப்பட்டணம் கிறிஸ்தவராஜா தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரின் மகன் நிகிலன். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து ஐ.ஆர்.இ. பகுதிக்கு சென்று விளையாடினார்கள்.
அப்பொழுது அங்குள்ள மதில் சுவர் மீது ஏறி குதிக்க முயன்ற பொழுது நிகிலன் மீது உயர் அழுத்த மின்கம்பிபட்டு மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த முரளி ஓடி வந்து பார்த்தபொழுது மின்சாரம் தாக்கியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இதை அடுத்து ஐ.ஆர்.இ பாதுகாவலர் முரளி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.