இந்திய சந்தையில் புதிய ஹரகேன் டெக்னிகா மாடல் வெளியீட்டை லம்போர்கினி உறுதிப்படுத்தியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி லம்போர்கினி ஹரகேன் டெக்னிகா மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்த நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த புதிய காரில் 5.2 லிட்டர் NA வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை மற்றும் 640 ஹெச்பி பவர் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
இதனை அடுத்து 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இருக்கும் இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.2 நொடிகளில் கடக்கும். இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 325 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறனை உடையது. மேலும் 20 இன்ச் அலாய் வீல்கள், ரி-ஒர்க் செய்யப்பட்ட விண்டோ லைன், டிப்யுசர் அடங்கிய புது ரியல் பம்பர், கார்பன் பைபர் என்ஜின் கவர், ரியர் ஸ்பாய்லர் ஆகியவற்றை இந்த புதிய கார் கொண்டுள்ளது.