உள்ளூர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்து இருக்கின்றனர்.
மணிப்பூர் மாநிலத்தில் சந்தல் மாவட்டத்தில் இந்தியா – மியான்மர் எல்லைப்பகுதியில் ரைபிள் படையை சேர்ந்த வீரர்கள் நேற்று மாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடித் தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை அங்குள்ள உள்ளூர் தீவிரவாதிகள் செய்துள்ளதாக தெரிகின்றது. மக்கள் விடுதலை சேனை என்ற அமைப்பு நடத்திய இந்த தாக்குதலில் ஆறுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.