மணிப்பூர் ஆளுநராக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் பதவியேற்றுக் கொண்டார். மணிப்பூர் ஆளுநராக இருந்த நஜ்மா அப்துல்லாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதிகாரப்பூர்வமாக இன்று இல.கணேசன் பதவிஏற்றுக்கொண்டார். இதுவரை தமிழகத்தில் இருந்து இரண்டு பாஜக தலைவர்கள் ஆளுநராக பதவி ஏற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் இதற்கு முன்பு பாஜகவில் தேசிய குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவரான இவர் தமிழக பாஜக தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.