மணிப்பூர் மாநிலத்தின் கவர்னராக இல கணேசன் பதவியேற்றுக்கொண்டார். தமிழக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்றுக் கொள்வதற்காக நேற்று மணிப்பூர் தலைநகர் இம்பால் என்ற இடத்திற்கு சென்றார். மணிப்பூர் விமான நிலையத்தில் மணிப்பூர் அதிகாரிகள் இவரை வரவேற்றனர்.
இன்று காலையில் கவர்னர் மாளிகையில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஐகோர்ட் நீதிபதி சஞ்சய்குமார் இல கணேசனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய பதவியேற்பு நிகழ்ச்சி பத்து நிமிடத்தில் முடிவடைந்தது. கவர்னராக பதவி ஏற்ற இல கணேசனுக்கு மணிப்பூர் மாநில முதல்வர் பிரன்சிங் பூங்கொத்து கொடுத்து தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்தார்.