Categories
தேசிய செய்திகள்

மணிப்பூர்: 6 பேர் புது அமைச்சர்களாக பதவியேற்பு…. வெளியான அறிவிப்பு,….!!!!!!

இம்பால்,மணிப்பூரில் முதலமைச்சர் பீரேன் சிங் தலைமையிலான அமைச்சரவையானது நேற்று விரிவுபடுத்தப்பட்டடு 6 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. இதனையடுத்து மணிப்பூர் முதலமைச்சராக பீரேன் சிங் சென்ற மாதம் முதல் மீண்டும் பதவியேற்றார். அவருடன் 5 அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த நிலையில் பீரேன் சிங் தனது அமைச்சரவையை நேற்று விரிவுபடுத்தினார். அப்போது புதிதாக 6 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அவர்களுக்கு கவர்னர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின் பீரேன்சிங் அமைச்சரவையில் அமைச்சர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. இதில் 10 பேர் பா.ஜ.க.வையும், 2 பேர் தேசிய மக்கள் கட்சியையும் சேர்ந்தவர்கள் ஆவர். பீரேன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், கூகி மக்கள் கூட்டணி மற்றும் சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனிடையில் 5 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள காங்கிரஸ் மட்டுமே சட்டசபையில் எதிர்க்கட்சியாக இருக்கிறது.

Categories

Tech |