Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்”…. ரிலீசுக்கு முன்பே பல கோடி குவிப்பு…. புதிய சாதனை…!!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ”பொன்னியின் செல்வன்”. இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப் பெரிய நட்சத்திரங்கள் அனைவரும் நடிக்கின்றனர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில் படத்தின் கதாபாத்திரங்களின் ஃபர்ஸ்ட் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகின்றார்கள். அண்மையில் கரிகாலன், வந்தியத்தேவன், நந்தினியைத் தொடர்ந்து இளவரசி குந்தவையின் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் திரிஷா கம்பீரமாக இருக்கின்றார் எனக் கூறினர்.

இந்த நிலையில் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டது. அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்களது பொன்னியின் செல்வன் பாகம்-1 திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஜூலை 8-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை டிரேட் சென்டரில் நடைபெற இருக்கின்றது. பொன்னியின் செல்வன் பாகம்-1 செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது எனக் கூறினர்.

அதன்படி நேற்று முன் தினம் டீசர் வெளியானது. டீசரை பார்த்தவர்கள் கூறியுள்ளதாவது, டீசர் பயங்கர பிரம்மாண்டமாக இருக்கின்றது. டீசரே இப்படி இருக்கின்றது என்றால் படம் வேற லெவல்ல இருக்கும். நல்ல வேலை நாங்கள் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை என கூறினர்.

இந்த நிலையில் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக சொல்லப்படுகின்றது. பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் 19 கோடிக்கு விற்பனையானது. இதையடுத்து சல்மான்கான் புதிய திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் 21 கோடிக்கு விற்பனையானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் 24 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

 

Categories

Tech |