மணிரத்தினத்தின் ரகசியத்தை கமல் பேட்டி ஒன்றில் போட்டு உடைத்துள்ளார்.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கமல்ஹாசன் மணிரத்தினம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியுள்ளதாவது, மணிரத்தினம் இந்தி பேச மாட்டார். இந்தி தெரியாது. ஆனால் மும்பையில் தான் படித்தார். அது ஒரு வீம்பு. அவர்தான் எர்லியஸ்ட் இந்தி தெரியாது போடானு நினைக்கிறேன் எனக் கூறினார்.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வடநாட்டு பக்கம் சென்ற போது மணிரத்தினத்திடம் இந்தியில் கேள்வி கேட்டார்கள். ஆனால் அவர் ஐஸ்வர்யா ராய் பார்த்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்த நிலையில் தான் மணிரத்தினத்தின் ரகசியத்தை வெளிப்படையாக கூறியுள்ளார் கமல்.
ஓ.. இது வேறயா?… 😂😂 pic.twitter.com/gqSxFKhcd9
— முகில் (@mukil1123) October 1, 2022