Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்தினத்திற்கு நன்றி….. “ஓடிடியில் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்” இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் ஸ்பீச்…‌!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் பாடல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இப்படத்தில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கலந்து கொண்டு பேசியதாவது, இயக்குனர் மணிரத்தினத்திற்கு நன்றி கூறுகிறேன். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த பிறகு ஓடிடி தளத்தில் வெளிநாட்டு தொடர்களை பார்ப்பதை நிறுத்திவிட்டேன். நம்முடைய கலாச்சாரத்தை பொன்னியின் செல்வன் திரைப்படம் அழகாக பிரதிபலிக்கிறது என்றார்.

Categories

Tech |