மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் சென்ற செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படம் இதுவரை 400 கோடி வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் 500 கோடியை எட்டும் என திரையுலகினர் கணித்துள்ளார்கள். இந்த படம் முதல் பாகத்திலேயே பட்ஜெட்டை விட 40 சதவீதம் அதிகம் வசூல் செய்துள்ளது.
மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகின்ற கோடை காலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதை தொடர்ந்து இத்திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றது. தற்போது மணிரத்தினத்தின் அடுத்த திரைப்படம் குறித்து செய்தி வெளியாகி இருக்கின்றது. தளபதி படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை மணிரத்னம் இயக்க உள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகின்றது. மேலும் இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கின்றதாம். ரஜினி காந்த் இணையும் படம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகும் போது அறிவிக்கப்படும் என சொல்லப்படுகின்றது.