மணிரத்னம் தயாரிப்பில் வெளியான நவரசா வெப் தொடரின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயந்திராவுடன் இணைந்து தயாரித்த நவரசா என்ற ஆந்தாலஜி வெப் தொடர் கடந்த ஆகஸ்ட் 6-ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியானது. இதில் கௌதம் மேனன், அரவிந்த் சாமி, கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிஜாய் நம்பியார் உள்பட 9 இயக்குனர்கள் 9 எபிசோடுகளை இயக்கியிருந்தனர். இந்த எபிசோடுகளில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரசன்னா, அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, அஞ்சலி, யோகிபாபு, ரம்யா நம்பீசன், பிரகாஷ்ராஜ், பார்வதி உள்ளிட்ட பல நடிகர்கள், நடிகைகள் நடித்திருந்தனர் .
மேலும் இதில் கிடைத்த மொத்த வருவாயும் கொரோனா ஊரடங்கால் நலிவடைந்த திரைத்துறையை சேர்ந்த 12 ஆயிரம் திரைப்படத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்நிலையில் நவரசா வெப் தொடரின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வெப் தொடரில் பணிபுரிந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் படப்பிடிப்பின் போது நடைபெற்ற சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.