மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் சுல்தான் பட புரமோஷனில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு 70% நிறைவு பெற்றிருப்பதாகவும் வருகிற 2022 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வரும் எனவும் கூறியுள்ளார்.