மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் கைதி பட நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்தப் படத்தில் ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, கீர்த்தி சுரேஷ், திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றும் வருகிற 2022 பொங்கலை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் எனவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தில் கைதி பட நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தில் ராம் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அம்ஜத்கான் இந்த படத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து நடிகர் அம்ஜத்கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் படத்தில் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.