Categories
சினிமா தமிழ் சினிமா

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’… யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம் தெரியுமா?…!!!

பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகின்றனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.

Ponniyin Selvan to wrap by August! To release in Summer, 2022! Tamil Movie,  Music Reviews and News

இந்நிலையில் இந்த படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆதித்ய கரிகாலனாக விக்ரம், அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, குந்தவையாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பழுவேட்டையராக சரத்குமார், சின்ன பழுவேட்டையராக பார்த்திபன், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும் நடிக்கின்றனர்.

Categories

Tech |