பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவானது தஞ்சையிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படமானது பிரமாண்டமாக உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால் , ரகுமான் என பல பிரபலங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகின்றது.
இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க கின்ற நிலையில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த நிலையில் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை தஞ்சையில் நடத்த படக் குழுவினர் திட்டமிட்ட நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகின்றது. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை தஞ்சையில் நடத்தாமல் வேறு இடத்தில் நடந்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியாக இருக்கிறது. இத்திரைப்படமானது வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளதுகுறிப்பிடத்தக்கது.