Categories
தேசிய செய்திகள்

மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக சி.பி.ஐ லுக் அவுட் நோட்டீஸ்…. வெளியான தகவல்….!!!!!

டெல்லி அரசின் புது மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்துள்ள புகாரில், கலால் துறையைக் கையாளும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ சென்ற வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது. சி.பி.ஐ-யின் முதல் தகவலறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 குற்றவாளிகள் பட்டியலில், மணீஷ் சிசோடியா முதல் நபராகச் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 11 பக்க ஆவணத்தில் ஊழல், குற்றவியல் சதி உள்ளிட்ட குற்றங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 13 பேருக்கு எதிராக சிபிஐ லுக்அவுட் சுற்றறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. இச்செய்தி வெளியானவுடன் பிரதமர் மோடியை விமர்சித்து, மணீஷ் சிசோடியா தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, உங்களது சோதனைகள் அனைத்தும் தோல்வியடைந்தது. எதுவுமே கிடைக்கவில்லை. தற்போது எனக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளீர்கள்.

இது என்ன வித்தை மோடிஜி..? நான் டெல்லியில் இருக்கிறேன். தயவுசெய்து நான் எங்குவர வேண்டும் என சொல்லுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். முன்பாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மணீஷ் சிசோடியா, 2024 ஆம் வருடம் நாடாளுமன்றத் தேர்தல் ஆம்ஆத்மி கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையிலான போராக இருக்கும். அரவிந்த்கெஜ்ரிவாலை பிரதமர் மோடிக்கு முக்கிய சவாலாகக் கருதுவதால் அவரைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு விரும்புவதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |