Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மண்சாலையாக மாறிய தார்சாலை…. பராமரிப்பு பணிகள் இல்லாததால் வேதனை…. விவசாயிகள் கோரிக்கை….!

15 ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் இல்லாமல் பழுதடைந்து உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் கான்சாபுரத்தில் இருந்து அத்திகோவிலுக்கு செல்லும் சாலையில் பிளவக்கல் பெரியாறு அணைக்கு செல்வதற்கான பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை விவசாய நிலங்களுக்கு விவசாயிகள் சிரமமின்றி செல்வதற்காக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் மண்சாலையாக மாறி உள்ளது.

இதனால் மழைக்காலங்களில் அப்பகுதி சேரும் சகதியுமாக இருப்பதால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.  மேலும் விவசாய பணிகளுக்கு செல்லும் டிராக்டர்கள் மற்றும் உரம் செல்லும் வாகனங்கள் கூட செல்ல முடியாமல் இருப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |