Categories
மாநில செய்திகள்

மண்டபங்களில் திருமணம் செய்பவர்களுக்கு…. கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி  வருகிறது. இதை கட்டுப்படுத்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதில் ஒருசில தளர்வுகள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் ஒரு சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வருகின்றனர். இவ்வாறு ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் அனுமதி பெறாமலே ஒரு சிலர் மண்டபங்களில் திருமணம் நடத்துவதாக புகார் எழுந்துள்ள காரணத்தினால், சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் மண்டபங்களில் திருமணங்கள் நடத்தினால், திருமண மண்டபத்திற்கு சீல் வைக்கப்படும் என்றும் கொரோனா விதிமுறைகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |