Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி…. 30 வீரர்-வீராங்கனைகள் தேர்வு….. வெளியான தகவல்…!!

பாஸ்கெட் பால் போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மண்டல அளவில் ஆன 16 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான பாஸ்கெட் பால் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஜூன் 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வேலூரில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக வீரர்-வீராங்கனைகள் தேர்வு கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இது கடலூர் மாவட்ட பாஸ்கெட் பால் கழகம் சார்பில் நடைபெற்றது.

இதில் மாவட்ட பாஸ்கெட் பால் கழக செயலாளர் விஜயசுந்தரம் கலந்து கொண்டார். இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்களில் பெண்கள் அணிக்கு 15 வீராங்கனைகளும், ஆண்கள் அணிக்கு 15 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் வேலூரில் நடைபெறும் பாஸ்கெட் பால் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 30 வீரர்-வீராங்கனைகளும் கலந்து கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |