சிலம்பம் தனித்திறமை போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தங்களுடைய தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு அரங்கத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாரதம் மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு முதல் ஒன்பது வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த போட்டி வயது அடிப்படையில் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதில் உள்வீச்சு, தலை சுற்று, சிலம்பம் வீச்சு, நடுகம்பு போன்ற பல்வேறு பிரிவுகளால் சிலம்ப வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி உள்ளனர். முன்னதாக இந்த போட்டியை நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா மற்றும் சேலம் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். குறிப்பாக தனித்திறமைகளை வெளிப்படுத்திய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பதக்கம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.