நடிகர் யோகி பாபு நடித்தபடம் மண்டேலா இந்த படத்தை மீண்டும் தணிக்கை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
யோகி பாபு நடிப்பில் வெளியான படம் மண்டேலா. இந்த படம் தனியார் டிவியில் ஒளிபரப்பானது. இப்படத்தில் முடி திருத்தும் தொழிலாளர்களை, கழிப்பறையை சுத்தம் செய்ய வைப்பது; செருப்பால் அடிப்பது; காரின் பின்னே ஓடி வர வைப்பது போன்ற காட்சிகள், படத்தில் இடம் பெறுகின்றன. இதுபோன்ற அவமரியாதை செய்யும் காட்சிகளை தணிக்கை செய்ய தவறிவிட்டனர். எங்கள் சமூகத்தின் மனதை புண்படுத்தும் வகையில் இந்த காட்சிகள் அமைந்துள்ளதாகவும், அதை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இது சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றம் முடிதிருத்துவோர் தொடர்பான சர்ச்சை காட்சிகள் குறித்து மண்டேலா பட இயக்குனர் பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது மேலும் மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்து, சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்களை நீக்கக்கோரி முடி திருத்துவோரின் சங்கத்தின் வழக்கில், தணிக்கை வாரியம், பட தயாரிப்பு நிறுவனமும் பதில் தர உத்தரவிட்டுள்ளது.