Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்… “சுற்றுச் சுவரில் உள்ள அலங்கார மின் விளக்கில் திடீர் தீ விபத்து”…!!!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இருக்கும் சுற்றுச்சுவரில் அமைக்கப்பட்டிருக்கும் மின்விளக்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலின் சுற்றுச் சுவற்றில் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றிரவு மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. இந்த நிலையில் மேற்கு சுவற்றில் உள்ள விளக்குகளில் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதை பார்த்த அப்பகுதி மக்கள் கோவிலின் மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு விளக்கில் பற்றிய தீயின் மீது மண்ணை போட்டு தீயை அணைத்தார்கள். இந்த தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருப்பதாக கூறுகின்றார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |