கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவை அடுத்த காஞ்சார் என்ற பகுதியில் திடீரென நிலசரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவு காரணமாக சிற்றடிச்சால் என்ற இடத்தை சேர்ந்த சோமன் என்பவரது வீடு மண்ணுக்கு அடியில் புதைந்து சிதையுண்டது.
இந்த நிலையில் வீட்டிற்குள் தூங்கி கொண்டு இருந்த சோமன் (53), அவரது மனைவி ஷிஜி (50), மகள் ஷிமா (25), ஷிமாவின் மகன் தேவானந்த் (4) சோமனின் தாயார் தங்கம்மா (70) ஆகிய 5 பேரும் மண்ணில் புதையுண்டு பலியானார்கள். தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.