குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கம்போவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிறந்த பச்சிளம் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. நிலத்தில் அழுகை சத்தம் கேட்ட விவசாயி ஒருவர், விரைந்து சென்று பார்த்தபோது, மண்ணுக்கு அடியில் இருந்து அழுகை சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த விவசாயி, குழந்தையை மண்ணுக்கு அடியில் இருந்து தோண்டி எடுத்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நீண்ட நேரமாக நிலத்தடியில் இருந்ததால் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குழந்தையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை புதைத்துச் சென்ற பெற்றோரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.