அரியலூர் அருகே கொள்ளிட கரையில் ஊர்ந்து சென்ற மண்ணுளி பாம்பை பிடித்த இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
அரியலூர் மாவட்டம் திருமுனைப்பாடி கிராமத்தில் உள்ள கொள்ளிடக் கரையில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கரையில் இருந்து ஒரு உயிரினம் ஊர்ந்து செல்வதைக் கண்ட இளைஞர்கள் அதனைப் பிடித்து பார்த்தபோது மண்ணுளி பாம்பு தெரியவந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையிடம் அப்பகுதி இளைஞர்கள் மண்ணுளி பாம்பை சாக்குப்பையில் கட்டி ஒப்படைத்தனர். இச்செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் மண்ணுளி பாம்பை ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.